
இலங்கை யாழ்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதற்கு, நடிகை குஷ்பூ தான் தொகுப்பாளினியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று முன்பு குஷ்பூ கூறியதை எதிர்க்கும் வகையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வர ஈழத்தமிழர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
குஷ்பூவின் இந்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், ஈழத் தமிழர்கள் கடும் கோபமடைந்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனால், நடிகை குஷ்பூ யாழ்ப்பாணத்திற்கு வந்தால் துடைப்பை கட்டை ஆசீர்வாதம் வழங்குவோம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குஷ்பூ நீக்கப்பட்டு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டிருக்கிறது.