
16வது ஐபிஎல் சீசன் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி தற்போது பல போட்டிகளை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 1.32 லட்சம் பார்வையாளர்கள் முன்னிலையில் முதல் லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமன்னா, ரஷ்மிக்கா போன்றோர் நடனமாடி சிறப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு அணிகள் தற்பொழுது மோதிக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண பல திரை பிரபலங்கள் விரைந்தனர்.
அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் சிஎஸ்கே விற்கும் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் நடந்த போட்டியில் தல தோனி மைதானத்திற்குள் என்ட்ரி கொடுத்த பொழுது போடப்பட்ட பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது இப்பாடலை விஜே ஜென் என்பவர் பிலே செய்துள்ளார். படையப்பா திரைப்படத்தில் இடம் பெறும் ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ என்ற பாடலுடன் அரங்கமே அதிர தல தோனி மாஸ் என்ட்ரி கொடுத்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
View this post on Instagram