10 படங்களுக்கு மேல் நடித்தும் ஹிட் கொடுக்க முடியாமல் திணறும் 6 இளம் ஹீரோக்கள்… அடடே இவருமா?…

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்கள் தற்போது வரை தங்களுக்கான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகின்றனர். பல திரைப்படங்களில் நடித்திருந்தும் இவர்களால் தங்களுக்கு என திரையுலகில் தனி முத்திரையை பதிக்க முடியவில்லை. அந்த வகையில் 10 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து சினிமாவில் தங்களது கேரியரை தேடிக் கொண்டிருக்கும் 6 இளம் வயது நடிகர்களை பற்றி தற்போது இத்தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

கௌதம் கார்த்திக்:

   

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனாக வாரிசு நடிகராக திரையுலகில் கால் பதித்தவர் கௌதம் கார்த்திக். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த கடல் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆனது. ஆனால் தற்பொழுது வரை இவர் தனது விடாமுயற்சியால் நடித்துக் கொண்டு வந்தாலும் இன்னும் தனது கேரியரை திரையுலகில் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்.

அதர்வா:

நடிகர் முரளியின் மகனாக வாரிசு நடிகராக களம் இறங்கியவர் நடிகர் அதர்வா. இவர் பானா காத்தாடி என்று திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். தன்னுடைய விடாமுயற்சியால் தற்பொழுது வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன் என பல படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக இவருக்கென ஒரு ஹிட் படம் இன்னும் அமையவில்லை.

சாந்தனு:

பிரபல நடிகரான பாக்யராஜின் மகன் என்று அடையாளத்துடன் வாரிசு நடிகராக திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் சாந்தனு. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் தற்பொழுது வரை இவருடைய எந்த படமும் மெகா ஹிட் அடித்ததில்லை. தனது திறமையை நிரூபிக்க திரையுலகில் விடாமுயற்சியால் தற்போது வரை போராடி வருகிறார்.

ஜிவி பிரகாஷ்:

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் தற்போது இசையமைப்பாளராக மட்டுமின்றி, நடிகராகவும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை  போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் மெகா ஹிட் என்று சொல்ல முடியாது.

கலையரசன்:

அட்டகத்தி, முகமூடி, மதயானை கூட்டம், மெட்ராஸ், கபாலி, தானா சேர்ந்த கூட்டம் என ரசிகர்களால் வரவேற்கப்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கலையரசன். இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த நந்தலாலா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பல திரைப்படங்களில் நடித்திருந்தும் தற்பொழுதுவரை இவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் விடாமுயற்சியுடன் போராடி வருகிறார்.

ஹரிஷ் கல்யாண்:

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.  இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலமே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவர் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல், ஓ மணப்பெண்ணே, தனுசு ராசி நேயர்களே என பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இவரால் திரையுலகில் ஒரு நிலையான இடத்தை தற்பொழுது வரை பிடிக்க முடியவில்லை.