திரை பட பாணியில் சீரியல் நடிகர் வீட்டில் நடந்த சம்பவம்.. வெளியான பகிர் தகவல்..

சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ மற்றும் ஒரு சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பிர்லா போஸ். இவர் சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் நடித்து வருகிறார். சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தனது கீழ் வீட்டு பையன் ஒருவன் தனது காரை இடித்து விட்டதாக சத்தம் போட்டு இருக்கிறார்.

   

ஆனால் அந்தப் பையன் அவரை மரியாதை இல்லாமல் பேசியதை அடுத்து இரு குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் பிர்லா போஸ் ‘வேட்டையன் ‘ படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்று இருக்கும் நேரத்தில் அவருடைய பையனை கீழ் வீட்டு பையன் கடத்திச் சென்று பத்து பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிர்லா போஸ் உடனடியாக வீட்டிற்கு வந்து மகனை மருத்துவரிடம் காட்டிய போது,

இது மாணவர்கள் அடித்த மாதிரி தெரியவில்லை காயம் இல்லாமல் ட்ரைனிங் எடுத்து உள் காயம் ஏற்படும் வகையில் அடித்துள்ளதாக மருத்துவர்கள் கூற,அதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் தனது மகனை அனுமதித்து சிகிச்சை அழித்து  வருகிறார். இது குறித்து பிர்லா போஸ் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக தெரிகிறது .

ஏற்கனவே கீழ் வீட்டு பையன் மீது ஒரு புகார் இருந்ததாகவும் தற்போது இன்னொரு புகார் வருவதை தொடர்ந்து  காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. ‘பார்க்கிங்’ பட பாணியில் ஒரு காரை இடித்த சின்ன பிரச்சனை பள்ளி மாணவரைக் கடத்தும் அளவிற்கு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. தற்போது இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.