வீட்ல சொன்ன பிறகு தான்.. அவங்களை லவ் பண்ணேன்.. இதுவரை சொல்லாத சுவாரஸ்ய தகவலை கூறிய தளபதி..!

நடிகர் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தந்தை எஸ் ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில்  நடித்து வந்தார்  அதன் பிறகு, படிப்படியாக உயர்ந்தார். கடுமையாக உழைத்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்பட்ட அவர் தளபதியாக உயர்ந்தார்.

   

அதன் பிறகு, கோடான கோடி ரசிகர்களின் ஆதரவோடு அரசியலில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், விஜய் தன் மனைவி சங்கீதா குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், சங்கீதாவை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் கூறியிருப்பதாவது, “என் அம்மா, அப்பா இருவரும் எனக்கு சங்கீதாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பிறகு இப்போது நான் சங்கீதாவை காதலிக்கிறேன். அந்த உணர்வு மிக அழகாக இருக்கிறது” என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூறுகிறார்.