அடுத்ததாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்… அடடே இவரா?… இப்படியே போனா அவ்ளோதான்…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

   

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், ஹேமா என பல பிரபலமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஏற்கெனவே இந்த சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரமான முல்லை கேரக்டரில் நடித்த காவ்யா சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தற்போது இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் நடிகர் குமரன். இவர் நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர் .விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தார். தற்பொழுது இவர் நடிப்பிலும் அசத்தி கொண்டு வருகிறார்.

சின்னத்திரையை தாண்டி தற்பொழுது வெள்ளி திரையிலும் நடிகராக ‘வதந்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்துள்ளார். இந்த சீரியலில் இவரது கதாபாத்திரத்திற்கு மக்களிடத்தில் அதிகமான வரவேற்பு உள்ளது. தற்பொழுது கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரன் ஓடிடி சீரிஸில் பிஸியாக நடித்து வருவதால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவர் நீடிப்பது என்பது சந்தேகம் தான் என்று கூறி வருகின்றனர்.

அதனை அடுத்து அடுத்த சீரிஸான ‘மாய தோட்டா’ என்ற சீரிஸிலும் ‘z பிரிவு அதிகாரியாக’ நடிக்கிறார் குமரன். மேலும் மாய தோட்டா சீரிஸிற்காக அந்த அதிகாரி செய்யும் வேலைகள் பற்றியும் என்ன வேலைகள் செய்கிறார்கள் என்பதை பற்றியும் அறிய வேண்டியிருக்கிறதாம். அதற்கான வொர்க் அவுட்களையும் குமரன் செய்து வருகிறாராம்.

மொத்தம் ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸில் சைத்ரா ஷெட்டி, அமித் பார்கவ் போன்ற சீரியல் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதனால் குமரன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகி விடுவார் என சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.