‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலக இது தான் காரணம்… பரபரப்பை கிளப்பிய சாய் காயத்ரி… என்ன சொன்னாங்க தெரியுமா?….

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த சீரியல் கூட்டு குடும்பத்தை பற்றி கூறுவதால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் அடிக்கடி நடிகர் நடிகைகள் மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றனர்.

   

அந்த வகையில் நிறைய கதாபாத்திர மாற்றங்கள் இந்த சீரியலில் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இந்த தொடர் பரபரப்பாகும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிலையில்  இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சாய் காயத்ரி திடீரென சீரியலை விட்டு விலகி உள்ளார்.

நேற்று இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதற்காக இந்த சீரியலை விட்டு வெளியேறினேன்? என்ற காரணத்தை பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ‘நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் கதை போக போக எனக்கு சரியாக தோன்றவில்லை. அது எனது சினிமா பயணத்திற்கு சரியாக வராது என்று தோன்றியது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு….