
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் தான் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தில் இருந்து பாடல் வெளியாகி வெளியாகி ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .இந்நிலையில் இப்பாடல் கடந்த 24 மணி நேரத்தில் youtube ‘விசில் போடும்’ பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது .
இரண்டாம் இடம் பிடித்த பாடலுக்கும் விசில் போடும் பாடலுக்கும் இடையே உள்ள பார்வையாளர்களின் வித்தியாசம் இரு மடங்கு என்பதையும் தெரிவித்துள்ளனர்.விசில் போடு பாடலுக்கு 7M க்கும் அதிகமான பார்வையாளர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பார்த்துள்ளதாகவும், 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.விஜய் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.
இப்பாடலை எழுதிய மதன் கார்க்கி தனியார் யுடூப் சேனல் ஒன்றுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். அதில் தொகுப்பாளர் விசில் போடு என்பதற்கு பதிலாக முதலில் என்ன வைத்திருந்தீர்கள் என்று மதன் கார்க்கி இடம் கேட்க அதற்கு மதன் கார்க்கி முதலில் சல்யூட் வச்சு பொண்ணு பண்ணலாம் ஒவ்வொருத்தருக்கும் சல்யூட் வச்சு பார்ட்டிக்கு அழைக்கிற மாதிரி இருக்கலாம் என்று யோசித்தேன் அதைவிட இந்த சவுண்ட் எல்லாத்துக்கும் கணேசன் ஆச்சு ‘விசில் போடு ‘இரண்டாவது சாய்ஸ் தான் என்று கூறியுள்ளார்.