வருஷத்திற்கு பல லட்சம் கோடி வருமானம்..? கிலோக்கணக்கில் தங்கம்… டாப் 7-ல் தமிழ்நாட்டு கோவிலுக்கு எந்த இடம் தெரியுமா..?

இந்தியாவில் சொத்து மதிப்பு அதிகம் உள்ள முதல் ஏழு கோவில்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பட்டியலில் 7-ஆவது இடத்தை பிடித்திருக்கும் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோயிலின் வருட வருமானம் 6 கோடி என்று கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த கோவிலுக்கு சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

அதற்கு அடுத்து, ஆறாவது இடத்தில் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயில் இருக்கிறது. அந்த கோவிலில் சீரடி சாய்பாபா அமர்ந்திருக்கும் சிம்மாசனம் 94 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. அக்கோவிலுக்கு, சுமார் 400 கோடி ரூபாய் கடந்த வருடத்தில் மட்டும் நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் பக்தர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் பொற்கோயில் இருக்கிறது. இந்த கோவிலின் ஆண்டு வருமானம் 500 கோடி என்று கூறப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் மேற்கூரையானது 400 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கோவில் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது.

அடுத்ததாக நான்காவது இடத்தில் கேரளாவில் அமைந்துள்ள குருவாயூர் கோவில் இருக்கிறது.  மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலின் வங்கி வைப்பு தொகையானது 1737.04 கோடி. மேலும் 2701.05 ஏக்கர் நிலம் இந்த கோவிலுக்கு சொந்தமானது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாக இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலில் இருக்கும் சிலையானது, 500 வருடங்களுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மூன்றாவது இடத்தில் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஜம்மு வைஷ்னோ தேவியின் கோயில் இருக்கிறது. இந்த கோவிலில் 1800 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ரொக்கமாக 2000 கோடி ரூபாய் வைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சாமி கோவில் இருக்கிறது. இந்த கோயிலின் சொத்து மதிப்பு 1.20 லட்சம் கோடி.

முதல் இடத்தில் இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இந்த கோவிலின் சொத்து மதிப்பு சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய். நாள் ஒன்றுக்கு சராசரியாக அங்கு 50 ஆயிரம் பக்தர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.