
தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சி குறித்து பல கருத்துக்கள் வலம் வந்தது. மேலும், கட்சி பெயரிலேயே பிழை இருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும், தளபதி விஜய் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மேலும், தற்போது வரை பத்திரிகையாளர்களையும் சந்திக்கவில்லை.
இந்நிலையில், சென்னை பனையூர் தமிழக வெற்றி கழக தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பொதுச்செயலாளர் குஷி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியுள்ளார். எனினும் அவர் நேரில் வரவில்லை. தற்போது தான் விஜய் புதிதாக கட்சி தொடங்கியிருக்கிறார்.
அதற்குள் ஆலோசனைக்கு நேராக வராமல் வீடியோ கான்ஃபரன்ஸா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனப்பிறகு தான் கட்சி தலைவர்கள், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக வருவார்கள்.