
பொதுவாக இந்த உலகில் ஒருவரை போல ஏழு பேர் இருப்பார்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் எங்கு? எப்படி இருக்கிறார்கள்? என்பது நமக்கு தெரியாது. எனினும் திரை பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் போன்று இருக்கும் நபர்கள் எளிதில் பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் சினிமா நட்சத்திரங்கள் போன்று இருக்கும் பலரும் இணையதளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலமாகியுள்ளனர்.
அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி போன்று இருக்கும் நபரின் புகைப்படங்களும் வீடியோக்களும் முன்பு வெளியாகி வைரல் ஆனது.
இந்நிலையில், நேற்று உத்திரபிரதேசத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோவிலில் பிரம்மாண்டமாக நடந்த கும்பாபிஷேக விழாவில், விராட் கோலி போன்று அச்சு அசலாக இருக்கும் அந்த நபர் இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையில் அங்கு வந்திருக்கிறார்.
அவரைப் பார்த்த ரசிகர்கள் மொத்தமாக ஓடி சென்று செல்பி எடுக்க முற்பட்டனர். கூட்டம் அதிகமானதால் அவருக்கு பதட்டம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து செல்ல முயன்றார். எனினும் ரசிகர்கள் விடாமல் அவரை பின்தொடர்ந்து சென்று செல்பி எடுக்க முயன்றனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.