
தொகுப்பாளினி டிடி
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சியை, அழகாக தொகுத்து இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. தற்போது மத்தகம் என்ற வெப் தொடரில் நடித்துள்ள, குறிப்பாக இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.
இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமாகி சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். பின் 2017 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இவரின் விவாகரத்துக்கு பின் டிடிக்கு, காலில் பிரச்சனை ஏற்பட்டு நிற்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்து வரும் நிலையில், சமீபத்திய வீடியோவில் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. அதில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாகவும், எனக்கு அவரை திருமணம் செய்ய ஓகே தான். ஆனால் அவருக்கு ஓகேவானு தெரியல என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ஏற்கனவே விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன், இதே போல், ஹிரித்திக் ரோஷன் நடித்த வார் படத்தை பார்த்துவிட்டு, அவரின் கட்டுமஸ்தான உடலால் ஈர்க்கப்பட்டதாக கூறியிருந்தார். மேலும் அதில் ஹிரித்திக் ரோஷன் கட்டாயம் விந்து தானம் செய்ய வேண்டும் எனவும் அப்படி செய்தால் அதிக பேர் அவரைப்போல் பிறப்பார்கள். இவ்வாறு வெளிப்படையாக விந்தணுவை, தொகுப்பாளினி பாவனா கேட்டிருந்தார்.