அடடே… இவர்தான் நடிகை உமாரியாஷின் 2வது மகனா?…  இதுவரை நீங்க இவரை பார்த்திருக்கவே மாட்டீங்க… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

நடிகை உமாரியாஸ் தனது இரண்டு மகன்களோடு எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80’s காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை உமாரியாஸ். இவர் 1983ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமானார்.

   

தமிழ் மட்டுமல்லாமல் இவர் ஹிந்தியிலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் 15 படங்கள் மற்றும் 8 சீரியல்களில் நடித்துள்ளார். நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ள இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.

இவர் 1992ல் பிரபல நடிகர் ரியாஸை திருமணம் செய்து அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அத்தோடு இவரின் மூத்த மகன் ஷாரிக்கை நம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

நடிகை உமா ரியாஸ் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை உமா ரியாஸ். இவர் தற்பொழுது தனது இரண்டு மகன்கள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

 

View this post on Instagram

 

A post shared by Uma Riyaz (@umariyazkhan)