கேரளா வெள்ளத்தால் திருமண ஜோடிக்கு நேர்ந்த ப ரி தாப நிலை… விடியோவை பார்த்து கலாய்த்த இணையவாசிகள்..!!

செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வந்த மணமக்களுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடத்தவிருந்த நிலையில் கேரளா முழுமையும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இருப்பினும் நிச்சயிக்கபட்ட நாளில் தங்கள் திருமணத்தை நடத்தி முடிக்க.

   

அனைவரும் முடிவு செய்த நிலையில் தளவாடி என்ற பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்திருந்தனர். கடந்த 2 நாளில் அதிக வெள்ளநீர் சூழ்ந்த நிலையில்,

சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அண்டாவில் மணமக்கள் ஏறி உட்கார்ந்து கொண்டு நீரில் மிதந்து கோவிலுக்கு வந்தனர் . இறுதியில் திருமணம் திட்டமிட்டபடியே எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது இந்த படங்கள் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த அனைவரும் ஷாக்காகியுள்ளனர். எனினும், எந்த ஆபத்தும் இல்லாமல் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.