இசைஞானி இளையராஜா பார்த்தா அழுதிருவாரு…..! வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!! வைரல் வீடியோ .

புத்தாண்டு என்றாலே இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய இளமை இதோ…இதோ பாடல் தான் நினைவுக்கு வரும். சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

   

இதேபோல் இந்தப்பாடல் ஒவ்வொரு நியூ இயர் கொண்டாட்டத்தின் போதும் போதும் நள்ளிரவு 12 மணிக்கு போடப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் இறுதியில் கூட இசைஞானி இளையராஜா ஒரு காரில் அமர்ந்துகொண்டு, ‘இளமை இதோ…இதோ’ என்னும் பாடலின் சில வரிகளைப் பாடி வீடியோவாக ரிலீஸ் செய்தார்.

அதன் பின்பே புத்தாண்டுக் கொண்டாட்டம் சூடு பிடித்ததாக நெட்டிசன்கள் பேசத் துவங்கினர். அந்த அளவுக்கு ஒவ்வொருவரின் மனதிலும் இளமை இதோ…இதோ பாடலுக்கு தனி இடம் உண்டு.

அந்தவகையில் இப்போதும், இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாஸ் உண்டு. இந்தப்பாடலை அண்மையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாடிக் கொண்டு இருந்தனர். அப்போது முன்வரிசையில் இருந்த ஒருவர் தனக்கு இந்தப்பாடலை பாட வேண்டும் என வெகுநாள் ஆசை எனச் சொல்லி மைக்கைப் பிடித்தார்.

ஆனால் அவர் பாடிய விதம் இருக்கிறதே…அய்யோ அந்த இசைஞானி கேட்டால் அழுதே விடுவார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதனால் தான் அவர் தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பாடக் கூடாது என சொல்லியிருப்பாரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.