இந்திய விமானப்படையில் டீ கடைக்காரரின் மகள்..!! 24 வயது பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள்

இவர் ஒரு பெண் என்பதையும் தாண்டி டீக்கடை காரரின் மகள் என்பது கூடுதல் வியப்பை தருகிறது. சுரேஷ் என்பவர் மத்திய பிரதேசம் நீமுச் மாவட்ட பேருந்து நிலையத்தில் டீ விற்பனை செய்கிறார்.

   

இவரின் மகள் அன்சல் சிறு வயது முதலே இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என துடிப்போடு இருந்தார். கேதார்நாத்தில் நடந்த வெள்ளப்பாதிப்பின் போது இந்திய விமானப்படையின் வீரச்செயலை பார்த்த அன்சல் அப்போதே விமானப்படையில் சேர முடிவெடுத்தார்.

அன்சல் படிப்பிலும், பாஸ்கெட்பால் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார் அன்சல். சாதாரண டீ விற்பனையாளரான சுரேஷ், தமது மகளை படிக்க வைக்க பெரிதும் சிரமப்பட்டார்.

பலமுறை தனது மகளின் படிப்புக்கு ஃபீஸ் கட்ட பணமின்றி தவித்துள்ளார். கடன் வாங்கி தனது மகளின் கல்விக் கட்டணத்தை செலுத்தியுள்ளார். IAF – ல் சேர்ந்து மிகவும் தீவிரமாக படித்து, தற்போது இந்திய விமானப் படையில் பைலட்டாக ஃப்ளையிங் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார்.

அன்சலில் இந்த வெற்றியை பார்த்து, மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர், ஷிவ்ராஜ் சிங் செளஹான் பாராட்டியுள்ளார்