‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள்.
அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.
இங்கேயும் ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பொதுவாக உதவுவதற்கு நல்ல பண வசதியும், அல்லது உடல் உழைப்பைச் செலுத்துவதற்கு ஏற்ப வாட்ட சாட்டமான உடல் வாகும் வேண்டும்.
என நாம் நினைத்துக் கொள்கிறோம். இங்கே ஒரு குட்டி நாய் ஒன்று தாகத்தோடு அடி பம்பின் அருகில் வந்தது. அந்த குட்டி நாயானது அடி பம்பை சுற்றியிருக்கும் தண்ணீரை நக்கிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த குட்டி பையன் ஒருவன், அவன் இத்தனைக்கும் அந்த அடி பம்பின் உயரம் கூட இல்லை. நாயின் தாகத்தை தீர்க்க அடிபம்பில் தண்ணீர் அடித்துக் கொடுக்கிறான்.
இந்த குழந்தை உதவ, நாய் அப்படியே அடிபம்பில் நாக்கை வைத்து தண்ணீர் குடிக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். உதவுவதற்கு வயது தடையே இல்லை என சொல்வீர்கள். இதோ அந்த வீடியோ
‘water, water everywhere
and not a drop to drink’,-Samuel Taylor Coleridge
# உதவுவதற்கு வயது தடையில்லை pic.twitter.com/lAFvtQiYnq— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 28, 2021