இந்த டாஸ்மாக் ஊழியரின் தெனாவட்டா பாருங்க..! தமிழ்நாடு முழுவதும் இப்படிதான் ஏமாத்துறாங்க.. கையும் களவுமாக சிக்கிய காட்சி..

நம்மில் பல நபர்களுக்கு இதை போன்ற சம்பவங்கள் கட்டாயமாக நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் இந்த காரோண காலகட்டத்தில் கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒன்று தான் மதுபான கடை தமிழ்நாட்டில் அதிக வருமானத்தை தருவது என்று கூறலாம், அங்கு சராசரியாக MRP விலைக்கே வியாபாரம் செய்யும் கடைகள் மிக குறைவு அதன் தொடர்பாக தொகுத்து வழங்குவது தான் இந்த வீடியோ காட்சி.

   

மதுக் கடையாகவே இருந்தாலும், ஒரு அரசு கடையில் கூடுதலாக வாங்குவது அடாவடியானது. இது போன்ற செயல் கிட்டத்தட்ட அனைத்து கடைகளிலும் நடந்துகொண்டுதான் உள்ளது. இந்த வாடிக்கையாளர் அதை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.

சமீபத்தில் தூத்துக்குடியில் 5 ரூபாய் அதிகம் வாங்கியது ஊடங்களில் வந்தது. அதற்காக அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அது வெறும் கண் துடைப்போ என்பது போல உள்ளது இந்த ஊழியரின் செயல். இப்போது phonpe, google pay, credit, debit card போன்ற டிஜிட்டல் முறையில் பயன்பாடுகள் தற்பொழுது அந்த முறையை மது பானக் கடைகளிலும் செயல் படுத்தினால் இது போன்ற சண்டை பிரச்சனைகள் வராது. அரசு நினைத்தால், நிர்வாகத்தினர் நினைத்தால் இது போன்ற அடாவடியை எளிதாக தடுத்திட முடியும்.

இல்லை அந்த ஊழியரே சொல்லுவது போல இருக்குமென்றால், இந்த வாடிக்கையாளரின் எதிர்ப்பு விழலுக்கு இறைத்த நீர்தான், எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று கடந்து போவதைத் தவிற வேறு வழியில்லை.

இந்த வீடியோவில் 230 ரூபாய் சரக்கிற்கு 240 ரூபாய் வாங்குகிறார் ஊழியர் அதை தட்டி கேட்டிடும் அவர் அஞ்சவில்லை இந்த விலைக்கு தான் விற்பேன் வேணும் என்றல் வாங்கு இல்லையென்றால் என்ன செய்யமுடியுமோ பண்ணிக்கோ என்று கூறுகிறார், இதோ அந்த வீடியோ.