இந்த மாதிரியான விளையாட்டு போட்டி நம்ம ஊருல தான் நடக்கும்.. இத ஒலிம்பிக்கில்ல கூட சேர்க்கலாம் போலேய..!

விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார். முன்பெல்லா, குழந்தைகள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் சக குழந்தைகளோடு சேர்ந்து அதிக நேரம் விளையாடுவார்கள்.

   

ஆனால் இப்போது லேப்டாப், செல்போன்களில் கேம்ஸ் விளையாடியும், யூடியூப்பில் கார்ட்டூன் வீடியோக்கள் பார்த்தும் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதில்லை. விளையாட்டு என்பது பள்ளிக்கூடத்தில் வரும் விளையாட்டு வகுப்பைத் தாண்டி பல குழந்தைகளுக்கு இல்லாமலேயே போய்விட்டது.

கிராமப் பகுதிகளில் குழந்தைகள் இன்னும் ஆரோக்கியமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பரமபதம், பம்பரம், கபடி ஆகியவை இன்னும் கிராமப் பகுதிகளில் துடிப்பாக இருக்கிறது. ஆனால் அதேநேரம், ஊர் திருவிழாக்களின் போதும், உள்ளூர் விசேசங்களின் போதும் பெண்களுக்கும் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள்.

‘அதேநேரம் இந்த ஊரில் முற்றிலும் வித்தியாசமாக ஒரு போட்டியை நடத்தியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? கணவர்கள் தங்கள் மனைவியை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். மனைவியை தூக்கிக்கொண்டு யார் முதலில் ஓடிவருகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.

குறித்த இந்த விளையாட்டு தமிழகத்தில் எந்த கிராமத்தில் நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால் அச்சுபிசகாமல் பொண்டாட்டியை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள் கணவர்கள். இதோ நீங்களே அந்தக் காட்சியை நீங்களே பாருங்கள்…