இப்படியொரு தராசு வாழ்க்கையிலேயே பார்த்துருக்க மாட்டீங்க… பாட்டியின் மனசு மாதிரியே தராசும் தாராளம்…!

இன்றைய கால மனிதர்கள் எல்லாம் எதையும் கம்யூட்டரைப் பார்த்துத்தான் நம்புகிறோம். ஆனால் நம்மோடு ஒப்பிடும்போது அன்றைய கால மனிதர்கள் ரொம்பவே புத்திசாலிகள் தான். நாமெல்லாம் இன்று சுவர் கடிகாரங்களின் வழியாகவும், செல்போனிலும் மணிபார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அன்றைய பெரியவர்கள் வானத்தைப் பார்த்தே மணி சொன்னார்கள். அந்த அளவுக்கு அவர்கள் நுட்பமானவர்கள்.

   

இதோ இங்கேயும் அப்படித்தான் ஒரு பாட்டி தராசு இல்லாமல் நூதனமாக எடை போட்டு கொடுக்கிறார். இப்போதெல்லாம் கடைக்கு கடை எலக்ரானிக் தராசு வந்துவிட்டது.. அதில் அளந்துதான் மக்களுக்கு பொருள்களாகக் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே ஒரு பாட்டி தன் கையில் ஒரு குச்சி வைத்திருக்கிறார். அதில் சணல் கயிற்றைக் கட்டி ஒரு துணியோடு இணைந்திருக்கிறார். அந்தத் துணியில் தான் விற்பனை செய்யும் உரித்த பலா பழங்களைப் போட்டு எடை போட்டு கொடுக்கிறார்.

இங்கே தான் விசயமே இருக்கிறது. பாட்டி, குச்சியில் இருக்கும் கயிறை அட்ஜஸ்ட் செய்தே அரைகிலோ, முக்கால் கிலோ என கண்ணாலேயே அளவெடுக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.