இப்படி ஒரு கணவர் அமைய கண்டிப்பா கொடுத்து வச்சிருக்கணும்.. ஒரே நிமிடத்தில் மனதை உருக வச்சிட்டாரே..! கலங்க வைத்த காணொளி

ஏங்க, வரும்போது உப்பும், மிளகும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பும் விசயங்களையே கணவர்கள் மறந்துவிடும் காலம் இது. ஆனால் இங்கே ஒரு கணவர், தன் மனைவிக்காக செய்யும் செயல் பலரையும் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது

கணவன், மனைவி பாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. இன்று பலரும் அந்த பாசத்தின் மேன்மை புரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அதனால் தான் சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் எமோஷனல் ஆகி விவகாரத்து வரை சென்றுவிடுகின்றனர்.

ஆனால் கணவன், மனைவி உறவு என்பது முழுக்க அன்பால் மட்டுமே கட்டுப்பட்டது. அதற்கு பணம், காசு இருக்கிறதா என்னும் கவலையோ அல்லது, அழகோ ஒரு விசயமே இல்லை. அதை உணர்ந்து கொண்டவர்கள் வாழ்வு வரமாகி விடுகிறது.

இங்கேயும் அப்படித்தான் ஒருவர் தன் மனைவி மீது அளவுகடந்த பாசம் கொண்டவர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு கல்யாண வீட்டுக்குச் சென்றிருந்தனர். மனைவியின் கையில் அடிபட்டு இருந்ததால் அவரால் கல்யாண பந்தியில் எடுத்துச் சாப்பிட முடியவில்லை.

உடனே அவரது கணவர் அவரே சோற்றை பிசைந்து தன் மனைவிக்கு ஊட்டிவிடத் துவங்கினார். நடுத்தர வயதைக் கடந்துவிட்டாலும் அந்த தம்பதிக்குள் இருக்கும் பாசம் கல்யாணத்துக்கு வந்தோரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்தது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். வீடியோ இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *