அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும்.அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண் அவரது தந்தையின் மீது மிகவும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அந்த பெண்ணின் அப்பா, திடீரென இறந்து போனார். இந்நிலையில் அவரது மகளுக்கு திருமணம் வந்தது.
இதில் திடீர் சர்ப்ரைஸாக மணப்பெண்ணின் இறந்து போன தந்தையின் புகைப்படத்தை பிளக்ஸ்போர்டாக ரெடி செய்து மணமேடையில் வைக்க மாப்பிள்ளை ஏற்பாடு செய்தார். இதைசற்றும் எதிர்பார்க்காத மணப்பெண் தன்னையும் மீறி கதறி அழுதார். தந்தையின் மீது மகள்களுக்கு இருக்கும் பாசம், வார்த்தைகளால் அளவிடவே முடியாது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.