கொஞ்சம் தண்ணி குடிக்க எவளோ போராட்டம்.? இணையத்தை கலக்கும் சுட்டி குழந்தையின் கியூட் வீடியோ

இணையத்தில் இப்போது குட்டிக்குழந்தை ஒன்று செம வைரல் ஆகிவருகிறது. தமிழ், மலையாள மொழிப்படங்களுக்கு அந்த குழந்தை செய்யும் ரீல் வீடியோக்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

   

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது.

நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

சில நேரங்களில் பார்க்க குழந்தைகளாகத் தெரிபவர்களின் மனதுக்குள் பெரிய மனிதர்களுக்கு இணையாக செயல்பாடு உடையவர்களாக இருப்பார்கள்.

அதிலும் சில குழந்தைகள் வேற லெவலில் திறமைசாலிகளாக இருப்பார்கள்.  இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிக்குழந்தை தமிழ், மலையாளத் திரைப்படங்களின் காட்சிகளுக்கு செம க்யூட்டாக பெர்மார்மென்ஸ் செய்து அசத்துகிறது.

இப்போது இந்த குட்டி தேவதையின் நடிப்பு நம்மை அப்படியே சொக்கிப் போக வைக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன். நீங்களும் மெய்சிலிர்த்துப் போவீர்கள்.