சரி இனிமே.. தமிழ்லயே பேசுறேன்.. புரியுதானு சொல்லுங்க.?மக்களவையில் தமிழில் பேசி மாஸ் காட்டிய கனிமொழி..! வைரல் வீடியோ

மக்களவையில் திமுக எம்பி கனிமொழி தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களவை உரையின் நடுவில் மத்திய அரசின் திட்டத்திற்கு “ஆத்ம நிர்பார் பாரத்” என்று பெயரிடுவதில் கனிமொழி சிரமப்பட்டார். .

   

உச்சரிக்க கடினமான ஹிந்தி வார்த்தையாக இருந்ததால் அவரால் முழுமையாக சொல்ல முடியவில்லை. ஆனால், அப்படிப் புரியாத மொழியில் பெயர் வைத்ததை நகைச்சுவையாகச் சுட்டிக் காட்டினார் கனிமொழி.

மேலும் அவர் எந்த அறிக்கையானாலும் ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழியில் இருக்கலாம் என்று குறிப்பிட்டார். குறித்த இக்காணொளி தற்போது இணையத்தில் வைராகி வருகிறது. அந்த வீடியோ பதிவு இதோ