எடிட்டருடன் மலர்ந்த காதல்… விரைவில் இரண்டாம் திருமணமா?… வைரலாகும் சீரியல் நடிகை தீபாவின் புகைப்படங்கள்…!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை தீபா. அன்பே சிவம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

   

ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்த இவர் சீரியல் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சீரியலில் மட்டுமல்லாமல் அனைத்து முன்னணி சேனல்களிலும் இவர் பிரபலமாகிவிட்டார்.

சீரியல்களில் இவரின் வில்லி கதாபாத்திரத்தை ரசிக்க தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இவர் சீரியல் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் பிறந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியல் பலவற்றிற்கு தயாரிப்பு மேலாளராக பணியாற்றிதற்போது தயாரிப்பாளராக உயர்ந்திருக்கும் சாய் கணேஷ் பாபு என்பவர் தான் தீபாவுக்கு அறிமுகம் கொடுத்துள்ளார்.

அவர் மேலாளராக இருந்த பல சீரியல்களில் நடிப்பதற்கு தீபாவுக்கு வாய்ப்பு கிடைக்க இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது .

இதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை தீபா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனைப் பார்த்த பலரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறி வருகின்றனர்.

இருவரும் நீண்ட வருடமாக காதலித்து வருவதாகவும் விரைவில் தீபா தனது இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபா சாய் கணேஷ் உடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.