சுந்தரி சீரியல் நடிகையா இது? நிஜத்தில் எவ்வளவு மாடனா இருக்காங்க பாருங்க! வைரலாகும் புகைப்படம்

பல ஆண்டுகளாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். பல வருடங்களாக ஏகப்பட்ட சீரியல்கள் இதில் ஒளிபரப்பாகி இருக்கின்றன. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா, சித்தி- 2, கண்ணான கண்ணே, சந்திரலேகா என பல சீரியல்கள் மிகவும் பிரபலம். பல ஆண்டுகளாக சன் டிவி தான் முதல் இடத்தில் உள்ளது, அந்த இடத்தை பிடிக்க தான் மற்ற டிவிக்கள் போராடி வருகிறார்கள்.

   

தமிழ் சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது சுந்தரி என்கிற சீரியல். கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை இந்த கதை மையப்படுத்தியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. கனவுகள் மற்றும் லட்சியத்துடன் கிராமத்தில் வாழ்ந்து வரும் பெண்ணாக தான் கேப்ரியல்லா நடிக்கிறார்.

சுந்தரி சீரியலில் முக்கிய நாயகியாக நடிப்பவர் கேப்ரியல்லா. இந்த சீரியலில் ஐரா படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்த கேப்ரியல்லா தான் ஹீரோயினாக நடித்து உள்ளார். இவர் சீரியலில் பக்கா கிராமத்து பெண்ணாகவே காணப்படுகிறார். ஆனால் இவர் நிஜத்தில் எவ்வளவு மாடர்ன் பெண்ணாக உள்ளார் என்பதை நீங்களே இந்த புகைப்படத்தில் காணுங்கள்…