நகைச்சுவை நடிகர் சிங்க முத்துவிற்கு, இவ்வளவு பெரிய மகனா ..?இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் என்று பலர் உள்ளனர் ,அதில் ஒருவர் தான் சிங்கமுத்து ,இவர் தனது அசாத்திய திறமையினால் தமிழ் திரையுலகை கலக்கியவர்.

   

இவர் தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வருகின்றார், துணை நகைச்சுவை நடிகராகவும் வளம் வந்து கொண்டு இருக்கிறார் ,இவர் சந்தானத்திற்கு,வடிவேலுக்கு துணை நகைச்சுவை நடிகராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

நீ வருவாய் என, ராஜா ராணி,வாத்தியார், வேல், பகவதி, மதுர, மாப்பிள்ளை சிங்கம், பட்டத்து யானை, சூரியவம்சம் ,தேசிங்கு ராஜா போன்ற திரைப்படங்கள் குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் சிங்கமுத்து வைகைப்புயல் வடிவேல் உடன் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்து அவர் பெயரை ஆழமாக பதித்தார்.

இவரின் மகனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவி கொண்டு வருகிறது இதனை பார்த்த இவரின் ரசிகர்கள், நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் விமர்சித்து வருகின்றனர்.