விக்ரம் தரமான நடிகர்கள் வரிசையில் நிச்சயமாக இவருக்கு இடம் எப்பவும் உண்டு. படத்துக்காக தன்னையே வருத்தி கொண்டு தன்னை அந்த கதாபாத்திரமாக மாற்றி கொண்டு நடிக்கும் ஒரு மகா நடிகர்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக விளங்குபவர் விக்ரம். ஒரு நல்ல ஹிட் படம் இல்லாமல் இருந்த இவர் பாலாவின் இயக்கத்தில் வெளியான சேது திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார்.பிறகு பல்வேறு படங்களில் தனது மொத்த உழைப்பையும் போட்டு நடித்தாலும் அதற்க்கான ஊதியத்தை இவர் பெற்றதில்லை.
தமிழ் சினிமாவில் சிவாஜி கமலுக்கு பிறகு முழு அர்ப்பணிப்புடன் நடிக்கும் ஒரு நடிகராக கருதப்படுபவர் விக்ரம்.சீயான் எனும் புனைப்பெயர் கொண்டுள்ள நடிகர் விக்ரம் சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்தவர்.தனது முழுத்திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
தற்போது விக்ரமின் குடும்பப்புகைப்படம் வைரலாகி வருகிறது.விக்ரமிற்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் உள்ளனர்.இவரது தங்கை அனிதா ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.விக்ரமின் சகோதரர் பல்வேறு பேட்டிகளில் தலை காட்டியுள்ளதால் அனைவருக்கும் அவரை தெரியும்.
இதுமட்டுமல்லாமல் விக்ரமின் சகோதரி சகோதரிக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவருடைய பெயர் அர்ஜுனன். மேலும், நடிகர் விக்ரமின் சகோதரி அனிதாவின் மகன் அர்ஜுனன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில காலத்திற்கு முன்னர் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.