பரோட்டா பிரியர்களே..!! அடுத்த வாட்டி பரோட்டா சாப்பிடுவதற்கு முன் இந்த வீடியோவ கண்டிப்பா பார்த்திடுங்க..

ஹோட்டலில் உள்ள புரோட்டா மாஸ்டர் முதல் நாளில் விற்பனையாகாமல் மீதமான பழைய பரோட்டாக்களை இரண்டு பாத்திரங்களில் சேகரித்து காலையில் தண்ணீரில் முக்கி ஊறவைத்து.

   

தோசைக்கல்லில் மீண்டும் சூடேற்றி புதிதாக போடப்பட்ட புரோட்டா போல தயார் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணவகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரோட்டாக்கள் தயாரித்து விற்பனை செய்வது வழக்கம். உணவகத்தில் தயாரிக்கப்பட்ட பரோட்டாக்கள் விற்பனையாகாத நிலையில், அடுத்த நாள் காலையில் அவற்றை அப்படியே நீரில் ஊற வைத்து, சூடேற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது போன்ற பரோட்டாக்களை உண்ணும் நபர்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த வீடியோ பரோட்டா பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ கீழே உள்ளது.