பாகுபலி படத்தை ஓவர் டேக் செய்த திருமணம் ..! மணமக்களை பாகுபலி ஸ்டைலில் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்…!

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர்.

வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பம், வீடியோத் தொகுப்புகள் செம கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.

இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது.

சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.

அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. சில திருமணங்களில் கல்யாணப் பொண்ணே திடீரென நடனமாடி பட்டையைக் கிளப்புவதும் உண்டு.

அந்தவரிசையில் இங்கே ஒரு போட்டோகிராபர் மணமேடையில் வைத்தே கல்யாணப் பொண்ணையும், மாப்பிள்ளையையும் ரொம்பவே ரொமாண்டிக்காக ஒரு வீடியோ செய்துள்ளார்.

அதிலும் பாகுபலி படத்தை அப்படியே கல்யாண வீடியோவில் கண்முன்பாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார். அதில் மணப்பெண் பாகுபலியில் அறிமுகமாகும் அனுஷ்கா ஸ்டைலிலும், ஹீரோ அதேபோல் பாகுபலி ஹீரோ பிரபாஸ் அறிமுகம் ஆகும் காட்சி போலவும் எண்ட்ரி கொடுக்கிறார்.

மிகப்பெரிய அளவு பட்ஜெட்டில் இந்த கல்யாண வீடியோ செம அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. ராஜமெளலி, ஷங்கர் உள்ளிட்ட பிரமாண்ட இயக்குனர்களுக்கே சவால் விடும்வகையில் கல்யாண வீடியோகிராபர் செய்திருக்கும் இந்த வீடியோ மிகவும் ரசனையாக உள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *