பாத்திரம் வைத்தால் தானாகவே பால் கறக்கும் பசுமாடு… ஆச்சரியமூட்டும் வைரல் வீடியோ இதோ..

பசு மாட்டைப் பொறுத்தவரை பால் தேவைக்கும், காளை மாடு உழவு தேவைக்காகவும் விவசாயிகள் வளர்க்கின்றனர். இதில் பசு மாட்டை பொறுத்தவரை என்ன தான் நேரத்துக்கு நேரம் உரிய உணவைக் கொடுத்தாலும் காலையிலும், மாலையிலும் நாம் தான் பால் கறக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

   

மாட்டின் சிறுநீர் புனிதமாகக் கருதப்படுகிறது. புது வீடு பால் காய்ச்சி செல்லும் போது மாட்டின் கோமியத்தை தெளிப்பது வழக்கமான ஒன்று தான். அதேபோல் மாட்டின் சாணம் உரமாக பயன்படுகிறது. இப்படி சிறப்புகளை உடைய பசு மாட்டுக்கு பால் கறக்க கரவைக்காரர் ஒருவர் வருவார்.

தமிழ் சினிமாக்களில் கூட நடிகர் ராமராஜன் செண்பகமே… செண்பகமே…என பாட்டுப் பாடி அவரே தான் பால் கறப்பார். இங்கே சினிமாவில் கூட நாம் இதுவரை பார்த்து விடாத ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

அது என்ன தெரியுமா? ஒரு பசுமாடு தானே பால் கறக்கிறது. அந்த மாட்டை வளர்ப்பவர் அதன் மடிக்கு நேராக பாத்திரத்தை மட்டுமே வைக்கிறார். இதோ அந்த வீடியோ…நீங்களே பாருங்கள்…