மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் முதுகு தெரியும்படி சென்ற பெண்… சாலையோரம் சென்றவர்களின் ரியாக்சன் என்ன தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பலரும் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள்.

   

ஆனால் இன்றைய தலைமுறையினர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இப்போதெல்லாம் பிராங்க் ஷோ என்னும் நிகழ்ச்சிகள் ரொம்பவும் பேமஸ். வேடிக்கைகாக செய்யப்படும் இந்த ஷோவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதேநேரம் சிலர் இந்த பிராங்க் ஷோக்களை சமூக அக்கறையுள்ள விசயத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

அந்தவகையில் இப்போது ஒரு பிராங் ஷோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஷோவில் ஒரு இளம் பெண் தன் முழு முதுகும் தெரியும்படி சுடிதாரின் பின்பக்க ஜிப்பைப் பூட்டாமல் செல்கிறார். இதனால் அவரது முதுகு தெரிவதோடு அவர் அணிந்திருக்கும் உள்ளாடையும் பளிச்செனத் தெரிகிறது.

அதைப் பார்த்த சாலையோரவாசிகள் சிலர் அவரிடம் அதைப்பற்றி எடுத்துச் சொல்கிறார்கள். சிலர் விக்கிரப் புத்தியோடு ரசனையோடு அதனை பார்த்துக் கொண்டு மட்டும் செல்கிறார்கள். ஒரு காரில் வந்தவர் என் காரில் ஏறி வேண்டுமானால் ஜிப்பை பூட்டிக்கொள்ம்மா என அன்பாக பேசுகிறார்.

ஒரு பெண் தன் ஆடையை திறந்ததுபோல் சாலையில் சென்றால் பார்ப்பவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு சிலர், இப்படியும் ஒரு பொழப்பு தேவையா? இதையெல்லாமா வீடியோவாக வெளியிடுவீர்கள்? எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.