மன நலம் பாதித்தவர் என்று கூட பாராமல் இப்படி ஒரு செயலை செய்ய உங்களுக்கு எப்படி தான் மனசு வருதோ.? மனதை உருக வைத்த வீடியோ

பொதுவாக தன்னையே யாரென்று தெரியாத சிறப்பு நிலை குழந்தைகளை தெய்வத்திற்கி சமம் என்று சொல்லுவர்கள். அதனாலேயே அவர்களை தெய்வத்தின் குழந்தை என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது.. ஆனால் அப்படிப்பட்டவர்கள பாரமாக நினைத்து பலரும் தொலைத்துவிடுவதுண்டு. அப்படியான ஒருவர் சாலையில் பரிதாபமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ராமேஷ்வரம், கன்னியாகுமரி என ஏதாவது சுற்றுலாத்தளங்களுக்கு அழைத்துப் போய் குடும்பத்தினரே தொலைத்துவிடுவதுபோல் விட்டு, விட்டு வந்துவிடுவதும் சமீபகாலமாக நடந்துவருகிறது. இதேபோல், பலரும் இப்படியான குழந்தைகளை பாரமாக நினைத்து ஏதாவது ஆசிரமத்தில் விட்டுவிடுகின்றனர். ஆனால் இதையெல்லாம் கடந்து வெகுசிலரே பேரன்போடு அவர்களை வளர்க்கின்றனர்.

இங்கேயும் அப்படித்தான் யாரோ ஒருவர், வீட்டில் இருந்த மூளை வளர்ச்சி குன்றிய நபரை பைக்கில் ஏற்றி நடுவழியில் இறக்கிவிட்டு விட்டனர். அவரை யார் ஏற்றி நடுவழியில் இறக்கிவிட்டார் என்றும் அவருக்குத் தெரியவில்லை. அவரது வீட்டுக்கு எப்படிச் செல்லவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியவில்லை.

அவரின் பரிதாபநிலையை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடியோவாக எடுக்க அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த இளைஞரின் பரிதாப காட்சி. இனிமேலும் சம்பந்தப்பட்டவர்கள் இப்படி செய்யாமலிருக்கட்டும். வீடியோ இதோ..