மாஸ்க் போடுறதுல இந்த பையன் வேற லெவல் தான்..! வீடியோ பாருங்க..!! சிரிச்சே வயிறு வலிச்சுடும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவிவருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் உயிர்சேதம் அதிகளவில் இருக்கிறது. இதனால் அரசும், பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் மாஸ்க் போடுவதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிவது என அரசும் விழிப்புணர்வூட்டி வருகிறது. அதேபோல் அரசு, இறந்த வீடு, கல்யாண வீடுகளில் எவ்வளவு பேர்தான் பங்கேற்க வேண்டும் எனவும் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளது.

   

ஆனால் பல இடங்களிலும் மக்கள் அச்சமின்றி தொடர்ந்து அப்படியே வழக்கம் போல் சென்று வருகின்றனர். இந்த கொரோனா பரவல் சூழலிலும் பலரும் மாஸ்க் அணியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் தான் இங்கே பொடியன் ஒருவன் வேற லெவலில் மாஸ்க் அணிந்துள்ளான். அப்படி அவன் என்ன செய்தான் என்கிறீர்களா? ஒரு இறந்த வீட்டுக்கு விசேசத்துக்குச் சென்றான்.

அப்போது சாப்பிடும்போதும் கூட மாஸ்க் அணிந்திருந்தான் பொடியன். அதுமட்டும் இல்லாமல் தனது மாஸ்கை சாப்பிடும் நொடியில் மட்டும் கழட்டிவிட்டு வாயில் சோற்று உருண்டையை போட்டதும் மாஸ்கை மாட்டிக் கொண்டான். இதைப் பார்த்து லட்சக்கணக்காணோர் குலுங்கி, குலுங்கி சிரிக்கின்றனர். ஆனாலும் இந்த பொடியனின் விழிப்புணர்வுக்கு விருதே கொடுக்கலாம் பாஸ்..இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.