வீட்டில் சம்சாரம் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் இன்று மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் மின்சாரம் இரண்டரக் கலந்தது. கரண்ட் இல்லாமல் ஒரு கனப்பொழுது கூட இருக்கமுடியாடு எனச் சொல்லும் அளவுக்கு இன்று மின்சாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
என்ன தான் இன்று வீட்டுக்கு, வீடு மின்சார இணைப்பு வந்துவிட்டாலும் காற்று, மழை என ஏதாவது இயற்கை சீற்றம் ஏற்பட்டால் முதலில் மின் தடை தான் ஏற்படும். அப்போதெல்லாம் நமக்கு லைன்மேன் தான் ஆபந்தாந்தவனாகத் தெரிவார். அதிலும் தென்னந்த்தோப்புகள் நிறைந்த பகுதிகளில் அடிக்கடி மின் கம்பிகளில் தென்னை மடல்கள் விழுந்துவிடும். இங்கேயும் அப்படித்தான் ஒரு தோட்டத்தில் தென்னை மடல் ஒன்று காய்ந்துபோய் மின் கம்பியின் மீது விழுந்துவிட்டது. அதை மின்வாரிய ஊழியர் ஒருவர் அகற்றினார். அதில் என்ன விசேசம் என்கிறீர்களா?
அவர் அதற்காக மின்சாரக் கம்பியிலேயே நடந்து சென்றார். அவரது கைகள் இன்னொரு மின் கம்பியை பிடித்திருந்தன. பார்த்தாலே அய்யோ விழுந்துவிடுவாரா என நடுங்கச் செய்யும் வகையில் இந்தக் காட்சிகள் இருந்தது. ஆனால் நடுத்தர வயதையும் தாண்டிய அந்த மின்வாரிய ஊழியர் அசால்டாக அதைச் செய்தார். வயது என்பது வெறுமனே எண்ணிக்கை மட்டும்தான் என்பதைப் போல அந்த ஊழியர் துணிச்சலாக செயல்பட்ட விதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.