
தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.
இயற்கையின் மீதும், யானைகளின் மீதும் தீராத காதல் கொண்ட இவர்கள் மருதமலை அடிவாரத்தில் யானையின் சாணம்…அதாங்க இயற்கைக் கழிவு இருப்பதைப் பார்த்தார்கள்.
உடனே அதை அவர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது அதிர்ந்து போயினர். காரணம், அந்த யானைக் கழிவில் பால் கவர், மாஸ்க், சாம்பார் பொடி பாக்கெட், நாப்கின், பிஸ்கட் கவர் என ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்தது.
மருதமலை அடிவாரத்தில் குப்பைமேடு ஒன்று இருக்கிறது. இது சோமையன்பாளையம் பஞ்சாயத்துக்குச் சொந்தமான குப்பை மேடு ஆகும். இந்த குப்பை மேட்டை இங்கு அமைத்த போதே யானை ஆர்வலர்கள் பலரும் எதிர்த்தனர்.
ஆனாலும் எதிர்ப்பை மீறி கடந்த இரு ஆண்டுகளாக இந்த குப்பை மேடு செயல்பட்டு வருகிறது. இதோ இப்போது, யானை ஒன்று அந்த குப்பை மேட்டில் இருந்து இவ்வளவு கழிவுகளைச் சாப்பிட்டிருக்கிறது.
ஒரு யானையின் ஒரு நேர கழிவில் இருந்தே இவ்வளவு பிளாஸ்டிக் கிடைத்திருக்கிறது என்றால், இவ்வளவு பிளாஸ்டிக்கும் யானையின் வயிற்றிலேயே இருந்திருந்தால் அது நிச்சயம் யிர் இழந்திருக்கும் என எச்சரிக்கை செய்கின்றனர் வன ஆர்வலர்கள். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.
கோவை மருதமலை அடிவாரத்தில் கிடந்த யானை சாணத்தை ஆய்வு செய்தபோது…
பிளாஸ்டிக் கவர்,முக கவசம்,நாப்கின்.இருந்ததால் அதிர்ச்சி
# வணப்பகுதியை ஒட்டிய மனிதர்கள் குடியிருப்பால் வனவிலங்குகளுக்கு ஆபத்து pic.twitter.com/1tkOOtafJU— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 10, 2022