வளர்ப்ப்புன இப்படி இருக்கனும்..! இந்த சிறு வயதிலையே இப்படி ஒரு தேச பற்றா..? ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பெருமை படுத்திய சிறுவன்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சிறுவன் ஒருவன் சல்யூட் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது வைரலாகும் வீடியோவில் 4 வயது சிறுவன் வீர் அர்ஜுன் தனது தந்தையுடன் விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நடந்து செல்கிறான்.

அப்போது அவருக்கு முன்னால் கவச சிஐஎஸ்எஃப் வாகனம் இருப்பதைக் கண்டார். வாகனத்தின் முன் வந்த சிறுவன் வீர் அர்ஜுன் உள்ளே ஒரு ஜவான் நிற்பதைக் கவனிப்பதை வீடியோ காட்டுகிறது.

 சிறிது இடைவெளிக்குப் பிறகு, அவர் கையை உயர்த்தி,  வீரர்களுக்கு வணக்கம் வைக்கிறார் பதிலுக்கு உள்ளே நிற்கும் வீரர்களும் சிறுவனின் வணக்கத்திற்கு பதில் புன்னகையுடன் வணக்கம் செலுத்தினர்.

இந்த வீடியோவை அக்டோபர் 24 அன்று ட்விட்டரில் சிறுவன் வீர் அர்ஜுன்  தந்தை , “இந்திய ராணுவம். எங்கள் சொந்த சூப்பர் ஹீரோக்கள்” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ