‘துணிவு’ திரைப்படத்தில் நடிக்க நடிகை மஞ்சு வாரியார் வாங்கிய மொத்த சம்பளம் இவ்வளவா?… ஷாக்கான ரசிகர்கள்… வைரலாகும் தகவல் இதோ…

‘துணிவு’ திரைப்படத்தில் நடிக்க நடிகை மஞ்சு வாரியார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது நாளை ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

   

இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக நடிகை மஞ்சு  வாரியார் நடித்து அசத்தியுள்ளார். இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சு வாரியார் ‘துணிவு’ திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக நடிகர் அஜித்துடன் கைகோர்த்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய  வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நடிகை மஞ்சுவாரியாரின் நடிப்பை  திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘துணிவு’ திரைப்படத்தில் நடிக்க நடிகை மஞ்சு வாரியார் ஒரு கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் ‘ஒரு கோடியா?’ என்று வாயை பிளந்து வருகின்றனர்.