ரவீந்தர் மகாலட்சுமியின் தல தீபாவளி கொண்டாட்டம்… என்னம்மா கொண்டாடுறாங்க…வைரலாகும் வீடியோ இதோ…

ரவீந்தர் மகாலட்சுமி தம்பதியினர் தங்களது தலதீபாவளியை தற்பொழுது கோலாகலமாக வெடிவெடித்து கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது.

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. இதைத் தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கும் அனில் என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.

   

இவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை திருப்பதியில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான ரவீந்தர் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பாளராக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி, வனிதா விஜயகுமார் திருமணம் போன்ற விஷயங்களை இணையத்தில் விமர்சித்து மிகப் பிரபலமானார்.

தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இவர்கள் திருமணமான நாள் முதல் சமூக வலைத்தளங்களின் பேசு பொருளாகி இருக்கின்றனர். இவர்களின் திருமணத்தை பலர் வாழ்த்தியும்,சிலர் விமர்சித்தும் வரும் நிலையில், அவர்களுக்கெல்லாம் தக்க பதிலடியை சமூக வலைத்தளங்களில் பேட்டிகள் மூலமாக இந்த ஜோடி கொடுத்து வருகிறது.

மேலும் ஹனிமூன் சென்று புகைப்படங்களை வெளியிடுவதும், ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவிடுவதும் என இணையத்தை கலக்கி வருகின்றனர் இந்த ஜோடி. தற்பொழுது சமீபத்தில் ரவீந்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து இவர்கள் தலை தீபாவளியை கொண்டாட மாட்டார்கள் என்று நினைத்திருந்த நிலையில், தங்களுடைய தலை தீபாவளியை கோலாகலமாக பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…