4 வருடம் கழித்து வெளிநாட்டில் இருந்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்த மகன்… ஆனந்த கண்ணீர் விட்டு அம்மா செய்த செயலைப் பாருங்க..!

வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது.

   

வெளிநாட்டு வாழ்க்கையில் கை நிறைய பணம் கிடைத்தாலும் நாம் சொந்த ஊருக்கு வரும் தருணங்கள் சொர்க்கத்திற்கு இணையானது. ‘சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?’ என்னும் பாடலை கேட்டாலே வெளிநாட்டில் இருப்பவர்கள் உருகி விடுவார்கள்.

அந்த அளவுக்கு அவர்களுக்கு உள்ளூர் பாசம் இருக்கும். அதிலும் பெற்றோர், சகோதர சகோதிரிகள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை பிரிந்து செல்லும் தவிப்பு மிகக் கொடூரமானது. அந்தவகையில் இங்கேயும் கவிதாஸ் என்ற அரியலூரைச் சேர்ந்த வாலிபர் தன் பிழைப்புக்காக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.

ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து தன் வீட்டுக்கு வருவதை தன் அம்மா மற்றும் அக்கா உள்ளிட்ட யாருக்குமே சொல்லாமல் திடீரென அவர்களின் முன்னால் போய் நிற்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும்

தங்கள் மகனை திடீரென அரியலூரில் பார்த்ததும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். மகனின் வரவை சற்றும் எதிர்பார்க்காத அம்மா கண்ணீர் விட்டு கதறி அழவே தொடங்கிவிட்டார். குறித்த இந்தக் காட்சியை இணையத்தில் 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.