தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். இவர் தந்தை பிரபல திரைப்பட இயக்குனர் இவர் தாய் ஒரு பாடகி. நடிகர் விஜய் சிறுவயதிலிருந்தே தன் தந்தை படங்களில் நடித்து வந்தார். இவர் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ராஜபார்வையிலே, சந்திரலேகா, பூவே உனக்காக, மாண்புமிகு மாணவன், லவ் டுடே ,நேருக்கு நேர், நெஞ்சினிலே, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் உள்ளது. லியோ ரிலீசிக்காக இவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.தனியார் youtube சேனல் ஒன்றுக்கு இன்டர்வியூ கொடுத்த நடிகர் மீசை ராஜேந்திரன் நடிகர் விஜய்க்கு இவ்வளவு சம்பளம் எப்படி என்று பல கேள்விகளை முன்வைத்து வருகிறார்.
சாருக்கு 70 கோடி நிர்ணயம் பண்ணது எந்த படம் உங்களுக்கு தெரியுமா?… புலி யாருடைய படம் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் .யார் அவர்?.. என்றால் விஜய் சாரோட பி ஆர் ஓ அந்த பி ஆர் ஓ எப்படி பணம் வந்தது அது விஜய் சாருடைய பணம் தான்.நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் யாருடையது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று தொகுப்பாளர் பதில் கூற. யார் தயாரிப்பாளர்?.. நடிகர் விஜயின் மாமாவாம் லண்டனில் இருந்து வந்துள்ளார்.
அது நடிகர் விஜய் உடைய படம் தான் உங்களுக்கு உங்களையும் நீங்கள் hype பண்ணுகிறீர்கள். நடிகர் ரஜினி சார் அவருக்கு தானாகவே வருகிறது.. அண்ணாத்த பாடத்தில் 118 கோடி சம்பளம் வாங்கி படத்தை நடித்துக் கொடுத்தார். அப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை என்ற காரணத்தினால் சன் பிக்சருக்கு இந்த படத்தை 80 கோடி ரூபாய்க்கு பண்ணி கொடுத்தார். இந்த மாதிரி நீங்க பண்ணனும் என்று கூறியுள்ளார்.