மலையாளத்தில் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஆர்யா பார்வதி. இவருக்கு தற்போது 23 வயதாகும் நிலையில், இவரது தாயார் 47 வயதில் இரண்டாவது முறையாக குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
முதல் குழந்தையோடு போதும் என நிறுத்திக்கொண்ட அவருடைய பெற்றோர், சுமார் 23 வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயார் கர்ப்பமாக இருப்பது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் தான் சகோதரி ஆக போவதாகவும்,
ஆர்யா பார்வதி குறிப்பிட்டு இருந்தார். அப்படி இருக்கையில், அவரது தாயாருக்கு தற்போது குழந்தையும் பிறந்துள்ளது.
சீரியல் நடிகையாக இருந்து வரும் ஆர்யா பார்வதி, அதிக காலம் வீட்டில் இல்லாமல் வெளியே தங்கி நடித்து வருவதாகவும் தெரிகிறது.
அதைப்போல் படித்து முடித்த பின்னர், நடனம், மாடலிங், போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.
முன்னதாக, தான் 23 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது மகளுக்கு தெரிந்தால் அவர் என்ன நினைப்பார் என ஆர்யா பார்வதியின் தாயார் மகளிடம் சொல்லாமல இருந்ததாக தெரிகிறது.
அப்படி இருக்கையில், வீட்டிற்கு வந்த ஆர்யா, தனது தாய் மீண்டும் கர்ப்பம் ஆனதை எண்ணி மகிழ்ச்சியிலும் திளைத்துள்ளார்.
சகோதரி என்பதை தாண்டி, மற்றொரு அம்மாவாக மாறி குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டார். சமீபத்தில் கூட இந்த தகவலை மிகவும் மகிழ்ச்சியோடு,
ஆர்யா பார்வதி வெளிப்படுத்திய நிலையில், தற்போது அவரின் தாயாருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியிட்டுள்ளார்.
இது பற்றியும் உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யா பார்வதி பதிவிட்டுள்ளார். மேலும் தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக ஆர்யா பார்வதி குறிப்பிட்டுள்ளார்.
‘வீட்டுல விசேஷம்’ பட பாணியில் நடந்த இந்த நிகழ்வை தொடர்ந்து, அவரின் குடும்பத்திற்க்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .