பிரம்மாண்டமாக 150 கோடி செலவில் கட்டப்பட்ட நடிகர் தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் புகைப்படங்கள்… வியப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.நடிகர் தனுஷ் 2002ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து வெளியான ‘நானே வருவேன்’ திரைப்படம் வசூலை வாரி குவித்தது.

நடிகர் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ‘வாத்தி’ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தற்பொழுது வரை இருந்து வருகிறது.

இத்திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் Sir என்கிற பெயரில் ரிலீஸ் ஆன இந்த படம் நல்ல வசூலும் பெற்று வருகிறது. மறுபுறம் தனுஷ் பல கோடிகள் செலவு செய்து சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ஒரு புது வீட்டை கட்டி வந்தார்.

வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம், விளையாடுவதற்கு இடம், ஹாம் தியேட்டர் என பல விஷயங்களை வைத்து இந்த வீட்டை கட்டியுள்ளாராம் தனுஷ்.

சமீபத்தில் நடிகர் தனுஷின் பிரம்மாண்ட வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்பொழுது இந்த வீட்டின் வெளிபுறத்தோற்ற புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.