ஒரே வருசத்துல 27 படங்கள்.. அதுவும் ஒரே கேரக்டர்.. எந்த நடிகரும் செய்யாத சாதனை.. வியக்கவைத்த தமிழ் நடிகர்..!

நடிகர் சத்யராஜ் தமிழ் திரை உலகில் மிகவும் முக்கியமான நடிகர். கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணசித்ர வேடங்களிலும் பல திரைப்படங்களில் தன் நடிப்பு திறமையால் அசத்தியிருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த அமைதிப்படை திரைப்படம் குறித்து தற்போது வரை பேசப்படுகிறது.

   

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பிரம்மாதமாக நடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. நக்கலும், நய்யாண்டியும் கலந்தது தான் சத்யராஜ். நகைச்சுவையிலும் பூந்து விளையாடியிருப்பார்.

இந்நிலையில், மேடை ஒன்றில் பேசிய சத்யராஜ் தெரிவித்ததாவது, ஒரே வருடத்தில் நான் 27 திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். அன்றைய காலகட்டத்தில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். வில்லனாக நான் நடித்துக் கொண்டு இருந்த சமயத்தில் ஜாலியாக இருப்பேன்.

நான் நடிக்கும் படத்தை நானே கலாய்த்து கொள்வேன். அப்படி இருந்த என்னை கதாநாயகனாக மாற்றியது இயக்குனர் மணிவண்ணன் தான். இன்று சத்யராஜ் இவ்வளவு பெரிய ஆளாக வந்திருப்பதற்கு மிக முக்கிய காரணம் மணிவண்ணன் மட்டும் தான். பல காரணங்கள் எல்லாம் கிடையாது. ஒரே காரணம் மணிவண்ணன் என்று தெரிவித்துள்ளார்.