
சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் அவரின் 43 வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இன்னும் சில தினங்களில் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தை தயாரிக்கும் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில், சூர்யா 43 படத்திற்காக நடிகர் நடிகைகளின் தேர்வு நடக்க இருக்கிறது. 18-லிருந்து 29 வயது வரை இருக்கும் ஆண்கள், பெண்கள். 30 முதல் 70 வரை உள்ள ஆண்கள், பெண்கள் என்று இரண்டு விதமாக தேர்வுகள் நடக்கும்.
இந்த தேர்வுக்கு வருபவர்கள் தங்களின் நடிப்பு திறமையை காண்பிக்கும் விதமாக, ஒரு நிமிட காட்சியை தங்களின் சொந்த வசனத்தில் தயாரித்து வரும் இம்மாதம் 11 மற்றும் 12-ஆம் தேதியில் நேரில் அணுக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, திறமை இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.