
தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் சினிமாவிற்கு என்று தங்கள் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள். அந்த வகையில், உலக நாயகன் கமலஹாசன், விக்ரம், சூர்யா என்று பலர் உள்ளனர். எனினும் முன்னணி நடிகர்கள் அல்லாத மூன்று பேர் திரைப்படங்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் ஷாம், 6 கேண்டில்ஸ் திரைப்படத்திற்காக பல நாட்கள் தூங்காமல் இருந்து தன் முகத்தை வீங்கிய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். அதேபோல், நடிகர் விஷால் அவன் இவன் திரைப்படத்திற்காக தன் கண்களை மாற்றி நடித்திருந்தார். அதனால் பார்வை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தும் அந்த திரைப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார்.
இதற்கு முன்பு இதுபோன்று யாரும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் நடிகை பூஜா, கண் பார்வையற்ற பெண்ணாக நடித்திருப்பார். அதற்காக அவர் லென்ஸ் மாட்டிக்கொண்டு உண்மையிலேயே பார்வை தெரியாமல் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதில், மலை ஏறுவது போல் வரும் காட்சியில், இயக்குனர் பாலா மைக்கில்