இதுவரை விஜேவாக இருந்த அர்ச்சனா தற்போது ஆர்ஜேவாக புதிய அ வதாரம் எடுத்துள்ளார்.இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.மிர்ச்சி எப்எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக களமிறங்கியுள்ள அர்ச்சனா, ‘ஹை சென்னை வித் அர்ச்சுமா’ என்ற காலை ஷோவை வழங்க இருக்கிறார்.காலை 7 மணி முதல் 12 மணி வரை வாரத்தின் 6 நாட்கள் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், அர்ச்சானா இன்று முதல் தனது பணியை தொடங்கியுள்ளார்.இந்த செய்தியை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “Cheers to nee beginnings!! Starting off a new journey as the Breakfast Rj on “Hi Chennai with Achuma – Attakaasam Unlimited” !! @mirchitamil. Send me your love” என அர்ச்சனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு மிர்ச்சியின் மார்னிங் ஷோ செய்து வந்த அஸ்வினி அர்ச்சனாவை வரவேற்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram