மைக் மோகன் முதல் குஷ்பு வரை…. 80’ஸ் பிரபலங்களின் ரீயூனியன்…. வைரல் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் அவ்வபோது திரும்பவும் சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம்.

   

இதனை ரியூனியன் என்று கூறுவார்கள். தற்போது இருக்கும் நடிகர், நடிகைகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட போதிலும் அவ்வளவாக பேசி கொள்வது கிடையாது.

ஆனால் 80’ஸ் 90’ஸ் காலத்தில் இருந்த நடிகர் தற்போது வரை நட்பாக இருந்து வருகிறார்கள். எவர் கிரீன் நடிகை, நடிகர்கள் ஒன்றினைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி வைரலாகி விடும்.

அதிலும் நடிகை சுகாசினி இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு ரியூனியன் ஆகவே செலிபரேட் செய்வார்.

அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பூ, நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், அம்பிகா, மோகன், ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஒன்றாக இணைந்து ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்கள்.

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை சுகாசினி மணிரத்தினம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இதை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு அழகான நட்புடன் இருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.