90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான.. டாப் 10 மூவிஸ் சுரேஷ்.. கின்னஸ் ரெக்கார்ட் பெற்றவரா.?

90-களில் பிறந்த குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு என்றாலே தொலைக்காட்சி மட்டும் தான். எனவே, அன்றைய காலகட்டத்தில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடர்கள் முதல் அனைத்து நிகழ்ச்சிகளும் அவ்வளவு பிரபலமானதாக இருந்தது. மேலும், அப்போது சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டம் என்பதால், டிவியில் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.

   

இன்று எத்தனையோ திரைப்பட விமர்சகர்கள் youtube இல் விமர்சனம் செய்தாலும், அன்று திரைப்பட விமர்சகர்சனம் என்றாலே டாப் 10 மூவிஸ் தான். அதில் தொகுப்பாளர் சுரேஷ் பேசுவது அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்தது. எந்த திரைப்படத்தையும் தரக்குறைவாக விமர்சிக்காமல் சிறப்பான பேச்சால் அருமையாக திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் கொடுப்பார்.

சன் டிவியில் வாரந்தோரும், ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒளிபரப்பாகும். அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே 90ஸ் குழந்தைகள் காத்திருப்பார்கள். இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற டாப் டென் மூவிஸ் சுரேஷ் இது பற்றி தெரிவித்திருப்பதாவது, அப்போதெல்லாம் என் நிகழ்ச்சியை இத்தனை பேர் கண்டுகளிப்பார்கள் என்பதே தெரியாது.

இந்நிகழ்ச்சிக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றும் பெரிய அளவில் எனக்கு தெரியாது. நீண்ட நாட்களாக நம் நிகழ்ச்சியை எடுக்காமல் வைத்திருக்கிறார்கள் என்பதால் பிடித்திருக்கும் என்று நானே நினைத்துக் கொள்வேன். ஆனால், தற்போது அப்படி இல்லை சமூக வலைதளங்கள்  எல்லாம் அதிக அளவில் வளர்ச்சியடைந்து விட்டது.

இப்போது மக்கள் என் வீடியோவிற்கு கீழ் கமெண்ட்டுகளை பதிவிடும்போது பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் 90-ஸ் குழந்தைகளின் என் நிகழ்ச்சியை மிக விரும்பி பார்த்திருக்கிறார்கள் என்பதும் தற்போது தான் தெரிகிறது.

அவர்கள் தங்களின் ஞாபகங்களை கமெண்ட்களாக பதிவிடும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 25 வருடங்களுக்கு மேல் தொலைக்காட்சியில் இருக்கிறேன். அதில் 22 வருடங்களாக டாப் டென் மூவிஸ் தொகுப்பாளராக இருந்தேன். கின்னஸ் ரெக்கார்டும் செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.