90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த WWE வீரர்கள்.. ஒவ்வொருவரின் சம்பளமும் எவ்வளவு தெரியுமா..? வைரலாகும் பட்டியல்..!

பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்தில் வாழும் குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்குகளும், மறக்க முடியாத நினைவுகளும் இருக்கும். அந்த வகையில், 90-களில் பிறந்த குழந்தைகளுக்கு என்று பல நினைவுகள் இருக்கிறது. தொலைக்காட்சி, விளையாட்டு, உணவு என்று அனைத்திலும் அந்த நினைவுகள் அடங்கியிருக்கிறது.

   

அந்த வகையில், ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளம் இல்லாத அந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி தான் 90ஸ் குழந்தைகளின் முழு நேர பொழுதுபோக்கு. அதில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவர்களுக்கு நீங்கா நினைவுகளாக மனதில் பதிந்து விட்டது. அதில், WWE நிகழ்ச்சியை விரும்பி பார்க்காத 90ஸ் குழந்தைகளே கிடையாது.

அதில் வரும் ஒவ்வொருவரின் பெயர்கள் குறித்த ஸ்டிக்கர்ஸ் மற்றும் சீட்டுகளை வாங்கி விளையாடுவார்கள். இந்நிலையில், WWE  வீரர்கள் சம்பள பட்டியல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இணையதளங்களில் அந்த புகைப்படம் வைரலாகி கொண்டிருக்கிறது.